கொட்டகலை ஹரிங்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 20 ஏக்கர் காடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
குறித்த தீவிபத்தானது இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை தொண்டமான் தொழில்பயிற்சி நிலைய வளாகப்பகுதிக்கு அண்மையிலேயே தீ பரவியுள்ளது.
தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஹட்டன் நகரசபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த இனம் தெரியாத மனிதர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.