பொலிஸார் உட்பட 21 பேருக்கு படுகாயம் - ஹம்பாந்தோட்டையில் கடுமையான மோதல்..

Report Print Shalini in சமூகம்

ஹம்பாந்தோட்டையில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்தோரின் எண்ணிக்கை 21 பேராக அதிகரித்துள்ளது.

தற்போது இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஏனையவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர்களே அதிகமானவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது பதற்ற நிலை உருவாகியுள்ளதுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, பிக்குகள் மற்றும் பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 3 பொலிஸார் உட்பட்ட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போது 21பேர் காணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments