இரண்டு மணித்தியால தடை நீக்கம்: அழைப்பினை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு!

Report Print Ramya in சமூகம்
142Shares

பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை செயற்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளால் குறித்த தினத்தன்று வருகை தர முடியாதுள்ளமையினால் திருத்தப் பணிகள் இடம்பெறாது என்று பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

Comments