ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்- 52 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
168Shares

ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன இலங்கை அபிவிருத்தி வலய நிகழ்வின்போது ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக 52 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் பலர் கைதுசெய்யப்படவுள்ளனர்.

இன்றைய நிகழ்வின்போது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்திருந்தது

எனினும் அந்த உத்தரவையும் மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதன்போது ஏற்பட்ட மோதலில் 21க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments