யாழில் மக்கள் நலத்திட்டங்களை அதிகளவில் செய்த பா.உறுப்பினர்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
118Shares

யாழ்.மாவட்டத்தில் 2016ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவு மக்கள் நல திட்டங்களையும், அதிகளவு நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டி ருக்கின்றனர்.

நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலிலே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இதன்போது வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் களான சி.சிறீதரன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 62.725 மில்லியன் ரூபாய் நிதியில் 511 மக்கள் நல திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதேபோல் அரச தரப்பு அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், திருமதி விஜய கலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், டக்ளஸ்தேவானந்தா ஆகியோரும் மக்கள் நல திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதேபோல் அத்துரலிய ரத்ன தேரர், பிமல் ரத்நாயக்க போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்.மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.

Comments