கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் வாழைச்சேனை (கோறளைப்பற்று) மற்றும் ஓட்டமாவடி (கோறளைப்பற்று மேற்கு) ஆகிய பிரதேச சபைகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கி வைத்தார்.
ஓட்டமாவடி ஸாஹிரா கல்வி நிலையம் ஏற்பாடு செய்த பரிசளிப்பும் கலாச்சார நிகழ்வும் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையால் ஏற்பாடு செய்திருந்த உழவு இயந்திர கையளிப்பு நிகழ்வும் இன்று(7) ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு உழவு இயந்திரத்தை பிரதேச சபை செயலாளர் எஸ் எம் சிஹாப்தினிடமும் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு பிரதேச சபை செயலாளர் ஜெ சர்வேஸ்வரனிடமும் குறித்த உழவு இயந்திரங்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் சிறார்களால் செய்யப்பட்ட ஆக்க கண்காட்சியினையும் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பின்னர் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து. கலாசார நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறார்களுக்கு வெற்றி பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், பிரதேச சபை செயலாளர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.