மனித நேயம் சிதைந்து போனதா? இப்படி ஒரு கலவரம் ஏன் வெடித்தது?

Report Print Gokulan Gokulan in சமூகம்
259Shares

மனித நேயத்தை சிதைக்கும் ஒரு நிகழ்வு இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நகரில் நடந்தேறியிருக்கின்றது. அனாலும் அதனை தடுப்பதனை விட வேடிக்கை பார்ப்பதிலேயே சிலர் மும்முரமாக இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சாதாரணமாக அடித்து விரட்டியிருக்கலாம், ஆனால் அரசின் நடவடிக்கைகள் அவ்வாறு அமையவில்லை. குறிப்பாக கண்ணீர் புகை மேற்கொண்டமையானது இரக்கமற்ற செயலே ஆகும்.

இதன்போது பல ஊடகங்களும், கமராக்களும் ஹம்பாந்தோட்டையை வட்டமிட்டு கொண்டிருந்தன ஆனால் ஒருவர் கூட அதனை தடுக்க முன் வரவில்லை.

பொது மக்கள் பலரின் செயற்பாடுகள் இன்றைய தினம் முடங்கிப் போயின. சீனாவுக்கு எதிராக போராட வேண்டியவர்கள் இன்றைய தினம் ஹம்பாந்தோட்டையை ஒரு காரணமாக சொல்லிக்கொண்டு போராட்டத்தில் குதித்து விட்டார்கள்.

மொத்தத்தில் அனைவரின் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments