மட்டக்களப்பின் பிரபல சமூகசேவையாளர் காலமானார்

Report Print Kumar in சமூகம்
172Shares

மட்டக்களப்பின் பிரபல சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தேசமான்ய அமரசிங்கம் சிவனேசராஜா நேற்று (06) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.

ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த பிரபல சித்த ஆயுள் வேத வைத்தியரான காத்தமுத்து அமரசிங்கம் அவர்களின் புதல்வாரன இவர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் காலி போன்ற இடங்களில் வசித்து வந்தபோது சிங்கள மொழியில் புலமை பெற்று இருந்தமையினால் சகோதர இன சிங்கள மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தார்.

அவர் வாழ்ந்த பிரதேசங்களில்; பல்வேறுபட்ட சமூக நலன்சார் பணிகளில் ஈடுபட்டதனால் அவரது சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கோடு இலங்கை சமாதான நீதவான்கள் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பின் சிபார்சினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கடந்த 2005.02.08 பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் தேசமான்ய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக ஓந்தாச்சிமடம் காளிகோயில் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஓந்தாச்சிமடம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments