உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் - மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

Report Print Kumar in சமூகம்
34Shares

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்னும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம் இன்று(07) காலை மட்டக்களப்பு கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

கறுவப்பங்கேணி விபுலானந்த விளையாட்டுக்கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் இரத்தங்களை வழங்கியதாக கழக தலைவர் ரி.டினேஸ் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டும் இந்த ஆண்டு 25வது ஆண்டை தமது கழகம் பூர்த்தி செய்வதனால் ஒரு ஆரம்ப நிகழ்வாகவும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததாக கழக தலைவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இரத்தான முகாமினை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments