கொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று(07) மாலை 04.00 மணியளவில் தெய்வத்திருமகள் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வினை கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்றமும் மகளிர் இந்து மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வன்னி மாவட்ட உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.