வீடொன்றில் திடீரென தீப்பற்றிக் கொள்ளும் பொருட்கள்! பேய், பூதங்களா காரணம்?

Report Print Kamel Kamel in சமூகம்
138Shares

கம்பளையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீர் திடீரென பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பளை அட்டபாகே கிராம சேவை பிரிவிற்கு உட்பட்ட உமகிரி உயன என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் சில இடங்களில் திடீர் திடீரென பொருட்கள் காரணம் எதுவுமின்றி தீப்பற்றிக் கொள்வதாக வீட்டில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேய், பூதங்களினால் இவ்வாறு வீட்டில் தீப் பற்றிக்கொள்வதாக வீட்டில் வசிப்பவர்கள் நம்புகின்றார்கள்.

கடந்த சில தினங்களாகவே இவ்வாறு திடீரென பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டில்கள், மெத்தைகள், அலுமாரி, நாற்காலிகள் மற்றும் வேறும் இடங்களில் காணப்படும் துணிகள் அதிகளவில் தீப்பற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட சிலர் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவில் சிறுவர்களின் ஆடைகளே தீப்பற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தேவாலயங்கள் மற்றும் மந்திரவாதிகளின் உதவியை நாடி வீட்டில் வசிப்போர் அலைந்து திரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென வீட்டிற்குள் ஏற்படும் துர்நாற்றத்துடன் பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments