கிளிநொச்சியில் தண்ணீர் இன்றித் தவிக்கும் தட்டுவன்கொட்டி கிராம மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்தில் குடிப்பதற்கு நீரின்றி சிரமப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நன்நீர் குறைந்த இடமாக காணப்படும் தட்டுவன்கொட்டி கிராமத்தில் தற்பொழுது கடும் வரட்சி நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிராமத்திற்கு கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபையினர் நீர்த் தாங்கிகளின் மூலம் நீர் வழங்கி வந்த நிலையில் தற்பொழுது நீர் வழங்கப் படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உப்பு நீரே பலரது வீட்டுப் பாவனைக்குப் பயன்படுவதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் பொது மக்கள் உப்பு நீரில் குளிக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தட்டுவன்கொட்டி கிராமத்தில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் போரினால் அங்கவீனமாக்கப்பட்டவர்கள் என சிறப்பு சேவைக்கு உட்பட்டவர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments