எயிட்ஸ் நோயின் தாக்கத்தினால் 44 பேர் உயிரிழப்பு

Report Print Mohan Mohan in சமூகம்
77Shares

நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

குறித்த நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது கடந்த 2015 ஆம் ஆண்டை விட கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதே வேளை நோய்த் தொற்றுக்குள்ளான 259 பேர் கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் தொற்றுக்கு இலக்காகி 189 ஆண்களும் 60 பெண்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 15 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments