குருநாகல் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் குறித்த மூதாட்டியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
குறித்த மூதாட்டிக்கு கடும் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.