இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு விடுதலை

Report Print Ramya in சமூகம்
43Shares

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுப்பட்ட இலங்கையர்களை விடுதலை செய்யுமாறு தமிழ்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கையர்கள் மூவரையே இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி குறித்த மூவரையும் இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments