பண்டாரவளை தியலும பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 4 கிலோகிராம் பெறுமதியான கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த ஆசிரியரை கொஸ்லாந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கஞ்சா தொகையை விற்பனை செய்வதற்காக ஆசிரியர்,தனது மோட்டார் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.