கடலூர் நாககன்னி அம்மன் ஆலயம் விஷமிகளால் உடைப்பு

Report Print Reeron Reeron in சமூகம்
98Shares

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்திவெளி பாலையடித்தோணா கடலூர் நாககன்னி அம்மன் ஆலய மடப்பள்ளி அறை விஷமிகளால் உடைக்கப்பட்டு ஆலய பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இன்று (09) ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வழமைப்போல் ஆலயத்திற்கு பூசகர் ஆலய பூசை ஒழுங்கிற்காக மடப்பள்ளியைத் திறந்து பொருட்கள் எடுப்பதாற்காக திறந்துள்ளார்.

இதன்போது, மடப்பள்ளி உடைப்பட்டு இருந்துள்ளதை அவதானித்ததாகவும் பின்னர் மடப்பள்ளியை அவதானித்தபோது மடப்பள்ளி அறையின் இருந்த உண்டியல், ஆறடி உயரமுள்ள மூன்று குத்து விளக்கு என்பன திருடப்பட்டு ஆலயப் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை அவதானித்த ஆலய பூசகர் ஆலய நிருவாகத்திற்கு உடன் தெரியப்படுத்தியதையடுத்து ஆலய நிருவாகத்தினர் ஏறாவூர் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் வருகைத்தந்து சம்பவத்தை அவதானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments