காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு!

Report Print Shalini in சமூகம்
1315Shares

வவுனியா பிரதான வீதியிலிருந்து காணாமல் போயிருந்த குழாய்க்கிணற்றை வவுனியா நகரசபையினர் கண்டு பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரன் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொது குழாய்க்கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின் ஊழியர்களின் உதவியுடன் குறித்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது குழாய்க்கிணறு இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும் அதை எவரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் குளாய்க்கிணறு பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும், இரண்டு வராங்களில் குழாய்க்கிணறினை புனர்நிர்மாணித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளதாகவும் வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரன் தெரிவித்துள்ளார்.

Comments