கல்முனையில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Report Print Nesan Nesan in சமூகம்
60Shares

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை தற்காலிக கட்டிடத்திற்கு இடம் மாற்றியமையைக் கண்டித்து இன்று(09) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்தியத்தின் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கட்டடத்தின் முன்னால் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினால் அதன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments