முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட பொதுமக்களின் உடமைகளும் ஆவணங்களும் தற்பொழுதும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் தம்மை பாதுகாப்பதற்காக எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்பதை அவர்கள் அமைத்திருந்த பாதுகாப்பு பதுங்கு குழிகள் மூலம் அறியமுடிகின்றது.
இந்த நிலையில், பொதுமக்களின் ஒரு பதுங்குகுழியில் அவர்களால் கைவிடப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆவணங்களில் ஒரு யுவதியின் புகைப்படம் அழிவடைந்த நிலையிலும் அவரின் முகம் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் புகைப்படத்தில் தெரியும் குறித்த யுவதி யார் அவர் இப்போது எங்கே? அவரும் அவர் சார்ந்த குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பான கேள்விகளுக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்களின் உறவினர்கள் காணமல் போனமை தொடர்பான கேள்விகளுக்கும் இன்று வரை விடை காணமுடியாத நிலையே தொடர்கின்றது.