வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற உலக உணவுத் திட்ட நிகழ்வு

Report Print Theesan in சமூகம்
63Shares

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று(09) வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் பதில் முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் உலக உணவுத் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் இயக்குனர் டேவிட், உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரண்டா பேட்டன் ஆகியோருக்கு நினைவுப் பரிசில்கள் பாடசாலை மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதி செயலாளர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.ராதாகிருஷ்ணன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் வவுனியா கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Comments