உப பொலிஸ் பரிசோதகருக்கு 12 ஆண்டு கடூழிய சிறை

Report Print Ramya in சமூகம்
100Shares

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 12 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கந்தகப்பப்பும ஹந்திய என்ற பகுதியில் போலி இலக்க தகட்டுடன் வேன் ஒன்றை ஓட்டிச் சென்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் மூன்று பேர் இறந்தமை, உட்பட 8 குற்றங்களுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த நபருக்கு 12 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையுடன் 59 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை வழங்குமாறும் இழப்பீட்டை வழங்க தவறினால், 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments