காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற போது பாடசாலை வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை வளாகத்தில் வைத்தே இந்த அதிபரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்ததாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டில் மாணவனை சேர்ப்பதற்காக பாடசாலை அதிபர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.