பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்படும் 2000 இற்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர்

Report Print Steephen Steephen in சமூகம்
95Shares

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 477இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாளை முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணைக்கப்பட உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறையை நிரப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவுக்கு அமைய இவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த 950 உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் தொல் பொருள் பாதுகாப்பு மற்றும் காட்டு யானைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும் சிவில் பாதுகாப்பு படையினர் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments