12 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை! நால்வருக்கு மரண தண்டனை

Report Print Ramya in சமூகம்
175Shares

12 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கந்தார பகுதியில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையே 12 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments