குடும்பிமலை மலைப்பகுதியில் தேக்குமரக்குற்றிகள் மீட்பு

Report Print Reeron Reeron in சமூகம்
120Shares

குடும்பிமலை பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 16 தேக்குமரக் குற்றிகளுடன் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மரக்குற்றிகளை ஏற்றிய வாகனம் புல்லுமலை வட்டார வன இலாக காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக வன இலாக அதிகாரி நா.நடேசன் தெரிவித்தார்.

இம்மரக்குற்றிகள் நரக்கமுல்ல அரச வனப்பகுதியில் வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஆறு பேரில் நால்வர் தப்பியோடியதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments