செங்கலடி மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

Report Print Reeron Reeron in சமூகம்
112Shares

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், 21 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தெரிவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியில் கணித பிரிவில் இரண்டு மாணவர்களும், உயிரியல் விஞ்ஞான துறைக்கு இரண்டு மாணவர்களும், சட்டத்துறைக்கு இரண்டு மாணவர்களும், கலைத்துறைக்கு பதினைந்து மாணவர்களும் தெரிவாகியுள்ளதாக கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தெரிவித்தார்.

சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள செல்வி வடிவேல் வசந்தலா மூன்று பாடங்களிலும் ஏ சித்திபெற்று மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், செல்வன் அருளானந்தம் சிலுக்சன் முன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டத்தில் எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இணைந்த கணிதம், வணிகக்கல்வி, கிறிஸ்தவம், நடனம், நாடகமும் அரங்கியலும், புவியியல் ஆகிய பாடங்ளில் மாணவர்கள் நூறு சதவீதம் சித்திபெற்றுள்ளனர்.

கடந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களும், கலைத்துறையில் 12 மாணவர்களுமாகச் சேர்த்து மொத்தமாக 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற நிலையில், இம்முறை 21 மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments