இடமாற்றத்தின் பின்னரே விண்ணப்பபடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Report Print Sumi in சமூகம்
50Shares

இடமாற்றக் கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே இடமாற்ற விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ். நகரப் பகுதியில் உள்ள "ப்லு வைல்" விருந்தினர் விடுதியில் இன்று(09) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதனை ஏற்றுகொள்ளாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்வோம் என கூறியுள்ளனர்.

வடமாகாண சுகாதார அமைச்சு தமது பணிப்புறக்கணிப்பின் பின்னர், பொது சுகாதார பரிசோதகர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், தமது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு, இடமாற்றத்தினை இரத்துச் செய்துள்ளனர்.

இந்த வகையில், அறிவிக்கப்பட்ட இடமாற்றம் இரத்துச் செய்யப்படுகின்றதென அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று முதல் கடமைக்கு திரும்புவதாக வடமாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு வடமாகாண பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.

அத்துடன், கடமைக்குத் திரும்பியுள்ளதை உரிய முறையில் அந்ததந்த திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றதாக கூறுப்படுகின்றது.

இடமாற்றக் கொள்கை நிராகரிக்கப்பட்டால், புதிய இடமாற்றக்கொள்கை தயாரிக்கப்பட்டதன்பின்னரே விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும்.

புதிய விண்ணப்ப படிவங்கள் 20 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை, எதிர்வரும் 20.01.2017ஆம் ஆண்டிற்கு முன்னரான இடமாற்றக்கொள்கை அறிக்கையினை தருமாறு கோரியிருக்கும் அதே சந்தர்ப்பத்தில், 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொது சுகாதாரப் பரிசோதர்களின் வருடாந்த இடமாற்றக் கொள்கையினை சீர்செய்யும் முகமாக பொது சுகாதாரப் பரிசோதகர்களுடன் கலந்துரையாடப்படுமென குறிப்பிட்டுள்ளார்கள்.

அவ்வாறாயின் 20ஆம் திகதிக்கு முன்னர் புதிய இடமாற்றக் கொள்கையினை வழங்க வேண்டும். 20ஆம் திகதிக்கும் 3ஆம் திகதிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும். அதன் பின்னரே விண்ணப்பபடிவங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

சுற்றுநிருபத்தின் கொள்கை இல்லாமல் எவ்வாறு விண்ணப்பிக்க முடியுமென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இடமாற்றக்கொள்கை வழங்கப்பட்டதன் பின்னரே, இடமாற்றத்திற்கான விண்ணப்பபடிவங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டு என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்க தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோள்கை தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே பொது சுகாதார பரிசோதகர்களின் விடயங்கள் கொள்கையில் தீர்மானிக்கப்படும்.

கலந்துரையாடலின் பின்னர் இரண்டு தரப்பும் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இடமாற்ற சபை கூடி, அதில் பொதுசுகாதார பரிசோதகர்கள் இருவர் உள்ளடக்கிய பின்னர், தாபனக் கோவையில் சொல்லப்பட்டவைகள் 01 அல்லது 03 நிறைவு செய்யப்படுமென தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொள்கைகளை தயாரிப்பதில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் மீண்டும் பணிப்புறக்கணிப்பு செய்யப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments