வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில இன்று இரவு 8.30 மணியளவில் இரு கழகத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
15வது வருடமாக நடைபெறும் சாந்தன் யூட் ஞாபகார்த்த மின்னொளியிலான காற்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டி இன்று மாலை 7.00 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சூடுவெந்தபுலவு வளர்மதி விளையாட்டுக்கழகத்திற்கும் பட்டானீச்சூர் ஏ.பி.சி விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இப்போட்டியின் போது இரு அணி வீரர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதில் இருவர் காயமடைந்துள்ளனர். இப்போட்டியினை தொடர்ச்சியாக நடாத்த முடியாமையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.