மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

Report Print Kumar in சமூகம்
928Shares

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களில் 3மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28) அதில் சிவாஞ்சலி அதிவிசேட சிறப்பாகத் தெரிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விட பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்ல உள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும், மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் திலகவதி ஹரிதாஸ் ,பிரதிஅதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலைஅபிவிருத்திக் குழுவினரும் ,பழையமாணவர் மன்றத்தினரும், நலன்விரும்பிகளும், பிரதேச மக்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments