யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சங்கத்தார் குளத்தில் குளிப்பதற்காக சென்ற யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலணை மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஸ் வினோஜா என்ற 16 வயது சிறுமியை சக மாணவிகளுடன் குளிப்பதற்காக சென்ற வேளையில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாகவே குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.