யாழில் மீண்டும் வாள் வெட்டு...! இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில்

Report Print Murali Murali in சமூகம்
435Shares

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் வைத்து இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த இளைஞர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலில் படுகாயடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments