யாழ்.குடாநாட்டில் தேங்காயின் விலை திடீர் உயர்வு

Report Print Thamilin Tholan in சமூகம்
202Shares

யாழ்.குடாநாட்டில் தேங்காயின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் சிறியளவிலான தேங்காய் 25 ரூபாவாகவும், நடுத்தரவிலான தேங்காய் 30 ரூபா முதல் 35 ரூபாவாகவும், பெரியளவிலான தேங்காய் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்னரை விட தேங்காய் வரத்து தற்போது குறைந்துள்ளதாகவும், இனிவரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments