யாழில் ஏற்பட்ட வாகன விபத்தில் 2 பேர் காயம்

Report Print Suman Suman in சமூகம்
122Shares

யாழ் - பருத்தித்துறை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் 02 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கயேஸ் வாகனம் ஒன்றுடன் மணல் ஏற்றிச் சென்ற கன்டர் ரக வாகனட் மோதியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரையடி பகுதியின் வழியாக மணல் ஏற்றி சென்ற கன்டர் ரக வாகனம் ஒன்றினை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிக்கப்படுகின்றது.

இதேவேளை, காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு அனுமதிப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை, மணல் ஏற்றி சென்றவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகின்றது.

மேலும், கன்டர் வாகன சாரதி இதன் போது கைதுசெய்யப்படதாகவும் கன்டரில் வந்த மிகுதி பேர் தப்பியோடிதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments