கொழும்பில் இடம்பெற்ற கொடுமை..! அநாதையான ஒருவயது குழந்தை

Report Print Murali Murali in சமூகம்
1308Shares

தனது மனைவியை அடித்து இழுத்துவந்து, களனி கங்கைக்குள் தள்ளிவிட்ட கணவன் தானும் கங்கைக்குள் குதித்த தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும், குறித்த இருவரினது ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவருக்கும் இடையிலான குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதான சுதந்தரலிங்கம் பாக்கியராஜா மற்றும் அவருடைய மனைவியான 25 வயதான ராஜகோபால் பானுமதி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவருக்கும் இடையில், அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெற்றமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments