இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்! வனத்துறையினர் மீது தாக்குதல்

Report Print Kumar in சமூகம்
142Shares

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் வேதாளை கிராமத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மண்டபம் அருகே ஆற்றங்கரை கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த அரசால் தடைசெய்யப்பட்ட அரியவகை பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்டபம் வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் நாட்டுபடகில் மறைத்து வைத்திருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுபடகையும் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன் திடீரென ஒரு கும்பல் வனத்துறையினரையும் ஊழியர்களையும் தாக்கியதோடு கடத்தல்காரர்களையும் மீட்டுச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடிசென்றுள்ளனர். பின் வேதாளைக் கிராமத்தில் கடல்அட்டைகள் பதப்படுத்தும் இடங்களை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதில் கடல்அட்டைகளை பதப்படுத்த பயன்படுத்தபட்டு வரும் அடுப்பு கேஸ் உருளைகள் பாத்திரங்கள் இவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை, தேடுதல் வேட்டையில் அல்லாபிச்சை அன்வர், சகுபர்சாதிக் ஜின்னா, உமர்அலி உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கும்பலாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தாக்குதல் முயற்சி, அசிங்கமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தல் ,கைதிகளை தப்பிச் செல்ல உதவியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்ப்பட்டுள்ளனர்.

மேலும், வேதாளை கிராமத்தில் பொலிஸார் குழு சிலரை தேடிவருவதால் கிராமத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments