இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டம்!

Report Print Ashik in சமூகம்

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் இரயில் மறியல் போராட்டத்திற்கு அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற விசை படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைக்கு கன்டணம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை வசமுள்ள 128 படகுகளையும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் உட்பட 20 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுக்கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு முழு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள துறைமுக மாவட்டங்களில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் குறித்து சிறுபான்மை மீனவர் விசைபடகு சங்க தலைவர் இருதயம் தெரிவிக்கையில்,

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தாக்குவதும் நடுக்கடலில் மூழ்கடிக்க முயற்சிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

தினசரி மீனவர்களையும், படகுகளையும் சிறை பிடித்துச் செல்வதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.

ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களையும், படகுகளையும் பொங்கலுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் தமிழகம் முழுவதும் இரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது என நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் அரசாங்கம் கையில் தான் உள்ளது என சங்க தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments