ஆதிவாசிகளின் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கி வைப்பு

Report Print Navoj in சமூகம்
53Shares

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள குஞ்சன் கல்குள கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி வளர்சிக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளின் தலைவர் எஸ்.வேலன் என்பவர் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் வே.மகேஸ்வரனிடம் இது தொடர்பான வேண்டுகோளினை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று (09) மாலை அப்பிரதேசத்திற்கு சென்று அவற்றினை மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பிற்கான தவிசாளர் வீ.கே.லிங்கராசவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments