தலைவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லிணக்க பொங்கல் விழா

Report Print Navoj in சமூகம்
53Shares

மட்டக்களப்பில் இலங்கை நாட்டின் நல்லாட்சிக்கான அரசாங்கம் ஆரம்பித்து இரண்டு வருட நிறைவை முன்னிட்டு மாவட்ட தலைவர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை(12) பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையிலே கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் அரசாங்க அதிபரது எண்ணத்திலும் ஐரோப்பிய நாடுகளினது நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் அனுசரணையிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே மாவட்ட தலைவர்கள் அமைப்பாகும்.

இந்த விழாவில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மாவட்டத்தின் திட்ட இணைப்பாளர் பி.பார்த்தீபன் மற்றும் இணைப்பாளர் கே..சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments