வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.