வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 26 வயதான சயந்தன் எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.