வெளிமாவட்ட நோயாளர்களின் எண்ணிக்கை வவுனியா வைத்தியசாலையில் அதிகரிப்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா வைத்தியசாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருட பிற்பகுதியிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக பதவியா, ஹெப்பிட்டிக்கொலவா, தமுத்தேகம, அனுராதபுரம் போன்ற பகுதிகளிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக அவர்கள் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றனர்,

வவுனியா வைத்தியசாலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்தாலும் உடனடியாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதற்கு வசதியாக உள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்றால் வைத்தியர் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் நீண்ட வரிசையிலிருந்து மருந்து எடுத்துக் கொண்டு வீடு செல்ல பல மணிநேரம் செல்கிறது.

ஆனால் வவுனியாவிற்கு வந்தால் உடனடியாக வைத்தியரை பார்வையிட்டு சிகிச்சைகளை பெற்றுக் கொண்டு உடனடியாக செல்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

இதனாலேயே நாம் வவுனியாவிற்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம். இதனால் அதிக நேரம் மிகுதியாக இருக்கிறது.

வவுனியா வைத்தியசாலையில் அதிகளவான பெரும்பான்மை இனத்தவர்கள் பணிபுரிவதால் மொழிரீதியில் எவ்வித தாமதமும் ஏற்படுவதில்லை என வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments