கால் இழந்தவர்களுக்கு பொய்க் கால்கள் தேவைப்படுகின்றது

Report Print Mohan Mohan in சமூகம்
52Shares

வடக்கில் போரினால் பாதிக்கப்படு தமது கால்களை இழந்தவர்களுக்கு பொய்க் கால்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போரின் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கு பொய்க்கால்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கண்ணையும் ஒரு காலையும் இழந்த விவாசாயி ஒருவர் தனது பொய்க்கால் பழுதடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த பொய்க்கால் பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அது இப்பொழுது உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவாசாயத்தை நம்பி வாழும் அவர் உடைந்த பொய்க்காலை சைக்கிள் ரியூப்பினாலும் வரிந்து கட்டிப் பயன்படுத்த முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments