டெங்குநோய் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 4 பேருக்கு தலா 25000 ரூபா அபராதம்

Report Print Ashik in சமூகம்
73Shares

மன்னாரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் 4 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று(10) உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது சுகார வைத்திய அதிகாரி குறித்த வீடுகளின் உரிமையாளர்கள் 4 பேருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்தமை மற்றும் வீட்டில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணப்பட்டவை ஆகிய குற்றங்களுக்காக 4 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் போது மன்னார் பனங்கட்டிக் கோட்டு மற்றும் சின்னக்கடை ஆகிய இடங்களைச் சேர்ந்த 4 வீடுகள் மற்றும் வீட்டுக் காணிகளில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் சூழல் காணப்பட்டமை, மற்றும் டெங்கு நுளம்பின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த அபராதத்தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments