வீதிகளில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள் -அசௌகரியத்தில் பொதுமக்கள்

Report Print Rusath in சமூகம்
113Shares

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட துறை நீலாவணை பிரதான வீதியின் இரு மருங்கிலும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக துறை நீலாவணைக் கிராம மக்களும் பிரயாணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

தினமும் இவ்வாறு கோழிக் கழிவுகள் வீசப்படுவதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

மருதமுனைப் பிரதேசத்திலுள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் கடைகளிலிருந்தே கழிவுகள் இரவு வேளைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் இவ்வாறு வீதியருகில் கொட்டப்பட்டு வருவதாகவும் துறைநீலாவணைக் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வரும் கழிவுகளே சட்டவிரோதமான முறையில் பொதுமக்களால் இப்பகுதியில் கொட்டப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிதுகாலம் இப்பகுதியில் யாரும் கழிவுகளைக் கொட்டவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளருக்கும், சுற்றுச் சூழல் பிரிவுக்கும், அறிவித்துள்ளதையடுத்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments