மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மௌலீசன் நரம்பியல் வைத்தியராக இடமாற்றம்

Report Print Reeron Reeron in சமூகம்
420Shares

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வைத்தியராக கடமையாற்றிய நவரெட்ணம் மௌலீசன் நரம்பியல் வைத்தியராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வந்தார்.

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு மருத்துவ வைத்தியர் நாகலிங்கம் மயூரனினால் மௌலீசனுக்குரிய இடமாற்ற கடிதம் உத்தியோக பூர்வமாக இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவராகிய வைத்தியர் மௌலீசன் ரஷ்யா நாட்டில் தனது வைத்திய துறை பட்டப்படிப்பை மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி இருந்தார்.

பின்னர் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் வைத்தியராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments