மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் காயம்

Report Print Rusath in சமூகம்
109Shares

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின் கோவில் போரதீவு - களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் நேற்று(09) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கோவில் போரதீவிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற கோவில் போரதீவு கிராமத்தைச் சேர்ந்த தேவராசா தனுராஜ்(18) என்பவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments