ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Report Print Ramya in சமூகம்
19Shares

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லங்கா சதோச நிறுவனத்தில் பணியாற்றிய 150 ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படச் செய்துள்ளமை மற்றும் சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments