வறட்சியால் மலையகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Report Print Ramya in சமூகம்
102Shares

ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் நீர் விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டு பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகின்றமையினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக சிங்கமலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைந்து உள்ளமையினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Comments