சீனி விலையேற்றம்! வவுனியாவில் வியாபாரிகள் பாதிப்பு!

Report Print Nesan Nesan in சமூகம்

தை பொங்கல் நெருங்கும் வேளை வவுனியாவில் சீனியின் விலை கூடியிருப்பதாலும், நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டு விலை காரணமாகவும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர்

சிறு வியாபாரிகள் வவுனியா நகரில் சீனி கொள்வனவு செய்யும்போது 95 ரூபா வீதம் ஐந்து கிலோகிராம் சீனி மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

மூடையாக சீனி பெற்றுக்கொள்ள வேண்டுமானால் கிலோவுக்கு 104 ரூபா வீதம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான விலைப்பற்றுச்சீட்டு வழங்க முடியாது என மொத்த சீனி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டு விலையாகிய 95 ரூபாவிற்கு விற்பதற்கு தங்களிடம் போதியளவு சீனி இல்லையென்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாதிருக்கின்றது.

தைப்பொங்கல் நெருங்கிவரும் இவ்வேளையில் சீனிக்கான செயற்கையான தட்டுப்பாடு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கோள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Comments